மகத்துவம் நிறைந்த மகா சிவராத்திரி: ஏன் கொண்டாட வேண்டும்? எப்படி விரதம் இருக்க வேண்டும்?

Mahendran

திங்கள், 1 செப்டம்பர் 2025 (18:59 IST)
மடப்புரம் துக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலைக்கோயிலாக அமைந்துள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். எனவே, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன் படி, மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை. மாலை 4:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆனால், மகா சிவராத்திரி அன்று மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. 
 
மகா சிவராத்திரி என்பது மாசி மாதத்தில் வரும் சிறப்புமிக்க சிவராத்திரி ஆகும். புராணங்களின்படி, பிரளய காலத்தில் பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து வழிபட்டாள். இந்த வழிபாடு சூரிய அஸ்தமனம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை நீடித்தது. பார்வதியின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவன், அவளுக்குக் காட்சி தந்து, சிவராத்திரி நாளில் தன்னை வழிபடுபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிப்பதாகவும், அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியை வழங்குவதாகவும் வரம் அளித்தார்.
 
இன்னொரு புராண கதையின்படி, மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் இடையில் 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவபெருமான் அடிமுடி காண முடியாத பெரும் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்தார். பிரம்மா அன்னமாகவும், மகாவிஷ்ணு வராகமாகவும் உருவெடுத்து அவரது அடிமுடியைத் தேடிச் சென்றனர். ஆனால், இருவராலும் அதைக் காண முடியவில்லை. இந்த நிகழ்வு மகா சிவராத்திரி நாளில்தான் நடந்தது. இந்தத் திருக்காட்சியே 'லிங்கோத்பவர் கோலம்' என்று அழைக்கப்படுகிறது.
 
மகா சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இந்த விரதம் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்த பலனையும், கங்கையில் பலமுறை நீராடிய பலனையும் தரும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்