1. சித்தி விநாயக விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம், காரிய தடைகளை நீக்கி வெற்றியை தரும். இந்த நாளில் விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்து, மோதகம், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டால், வறுமை நீங்கி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும்.