வைத்தீஸ்வரன் கோவிலில் சகோபுரம் வீதி உலா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

Senthil Velan
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (09:54 IST)
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சகோபுரம் வீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில்  தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல் நாயகி சுவாமி உடனாகிய ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இக்கோயில் செவ்வாய்  தளமாகவும் விளங்குகிறது. தைச்செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசுவாமி சகோபுரத்தில் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருள மகா தீபாரதனை காட்டப்பட்டது. 
 
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சகோபுரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானை தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சாமிகள் வடம் பிடித்து  இழுத்தார். அவரைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் சகோபுத்தை வடம் பிடித்து நான்கு மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.

ALSO READ: தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு? நாம் தமிழர் பிரமுகர்கள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

வீதி உலாவையொட்டி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்