புரட்டாசி பெருமாளுக்கு மட்டும் உரிய மாதமா...?

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (11:38 IST)
பெருமாளுக்கு உரிய மாதமாக புரட்டாசி மாதமே பக்தர்களால் பார்க்கப்பட்டு, விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.


நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் அவதரித்தது புரட்டாசி மாதத்தில் தான். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகவான் பலமாக இருந்தால் தான் தொழில் வளர்ச்சி, வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்கும்.

புதன் பகவானுக்கு உரிய அதி தேவதையாக கருதப்படுவது மகாவிஷ்ணு. அதனால் புதன் பகவான் அவதரித்த புரட்டாசி மாதத்தில் அவருக்கு உரிய தெய்வமான மகாவிஷ்ணு பகவானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருளும், அதன் வழியாக புதன் பகவானின் அருளும் பரிபூர்ணமாக கிட்டும் என்பது நம்பிக்கை.

சிவனுக்கு இணையாக ஈஸ்வர பட்டம் பெற்ற சனிபகவான், பெருமாளிடம் வரம் பெற்ற மாதம் என்பதாலும் புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சனிபகவானால் ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிக்கலாம் என்பதுடன், பெருமாளின் அருளையும் பெற்று விடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்