நவராத்திரி: கிரக தோஷங்களில் இருந்து விடுபட செய்யும் அம்பாள் வழிபாடு !!

புதன், 28 செப்டம்பர் 2022 (15:59 IST)
புரட்டாசியும் - பங்குனியும் எமனின் கோரைப் பற்களாகக் கருதப்படுகின்றன. எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஒன்பது நாளும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.


நவராத்திரியின் வகைகள்:

1. ஆவணி அமாவாசைக்குப் பிறகு வருவது ஆஷாட நவராத்திரி. 2. புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு வருவது சாரதா நவராத்திரி. 3. தை அமாவாசைக்குப் பிறகு வருவது சியாமளா நவராத்திரி. 4. பங்குனி அமாவாசைக்குப் பிறகு வருவது வசந்த நவராத்திரி.

இந்த நான்கு நவராத்திரிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது சாரதா நவராத்திரி தான். மேற்கண்ட, இந்த நாட்களில் ஒன்பது மலர்கள், ஒன்பது வகை அலங்காரங்கள், ஒன்பது வகை நிவேதனம் என்ற கணக்கில் அம்பாளை வழிபடுதல் சிறப்பு. அம்பாளை அலங்கரித்து அழகுபடுத்தினால் வாழ்க்கையும் அழகுடன் அமையும் என்பது ஐதீகம்.

பொதுவாகவே, சாரதா நவராத்திரி என்பது பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி, நவமி திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. அத்துடன் அம்பாளின் கதையை கேட்க, கேட்க கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். இதன் பலனாய் பிரிந்தவர்கள் கூட ஒன்று இணைவர். திருட்டு பயம், வீணாகப் பொருள் இழத்தல், நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் என அனைத்துமே அம்பாளை நவராத்திரியில் கொண்டாட விலகி ஓடுமாம்.

நவராத்திரியில் மட்டும் தான் அம்பாளின் கதையை வாசிக்க வேண்டும் என்பது இல்லை. நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிப்பது மிகச் சிறப்பானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்