கார்த்திகை மாதம் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருவதாகவும் இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் தைப்பூச மற்றும் திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்கள் வரை இருப்பதை அடுத்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமின்றி அய்யப்பன் சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பழனிக்கு வந்து தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்ததாகவும் இதனால் முருகனை தரிசிக்க மூன்று மணி நேரம் காத்திருந்து தாகவும் கூறப்படுகிறது
இந்தநிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.