நவராத்திரியின் எட்டாம் நாள், அன்னை பராசக்தியை நரசிம்மியாக வழிபடும் சிறப்புமிக்க நாளாகும். நரசிம்மரின் சக்தியாக விளங்கும் இவள், மனித உடலும் சிங்க முகமும் கொண்டு, சிங்க வாகனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறாள். தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் ஆற்றல் கொண்டவள் இந்த அன்னை.
நரசிம்மி வழிபாடு முறை
நரசிம்மி வழிபாட்டிற்கு, காசுகளைக் கொண்டு தாமரை கோலம் போட வேண்டும். பிறகு, 18 அகல் விளக்குகளை எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தி ஏற்ற வேண்டும். பாயசம் நிவேதனமாகப் படைக்க வேண்டும். பூஜைக்குப் பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலைகளைப் பயன்படுத்தலாம்.