நவராத்திரியின் மூன்றாவது நாள், அன்னை பராசக்தி வராகி தேவியாக வழிபடப்படுகிறார். அம்பிகையின் படைத்தளபதியாக விளங்கும் வராகி, 'மங்கலமய நாராயணி' என்றும் போற்றப்படுகிறார். வராக நாதருக்கு வராக ரூபத்தில் அன்னை காட்சியளித்ததால் இந்தப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
நவராத்திரியின் மூன்றாம் நாளில், வராகியை வழிபட, அரிசி மாவினால் மலர் கோலம் இட வேண்டும். 20 அகல் விளக்குகளை தேங்காய் அல்லது இலுப்பை எண்ணெய் கொண்டு ஏற்ற வேண்டும். பலாப்பழம் மற்றும் கற்கண்டு சாதம் நிவேதனமாக படைக்க வேண்டும். பூஜைக்கு சம்பங்கி மற்றும் மருக்கொழுந்து பூக்களைப் பயன்படுத்தலாம்.
வராகியின் ஆதிக்க கிரகம் சுக்கிரன். எனவே, அவரை வழிபடுவதால் சுக்கிர தோஷங்கள் நீங்கும். வாழ்க்கை தடைகள் விலகி, வெற்றி, செல்வம், மற்றும் செழிப்பு உண்டாகும்.