9 நாட்கள் நவராத்திரி விரதம் இருந்தால் ஏராளமான பலன்கள்..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (18:57 IST)
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நிலையில் அந்த ஒன்பது நாட்களில் விரதம் இருந்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் 9  நாட்களை சாரதா நவராத்திரி என்றும் தை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரக்கூடிய நவராத்திரியை மகா நவராத்திரி என்றும் கூறப்படுவது உண்டு.  

நவராத்திரி பண்டிகையின் போது ஒன்பது நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருந்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்று என்பது ஐதீகமாக உள்ளது.  

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியாகவும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும் அம்பாளை வழிபாடு செய்வார்கள்

9 நாட்களும் தினமும் குளித்து சுத்தமாக அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வந்தால் கோடி பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வார்த்தை ஆகும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்