மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்புகள் என்னென்ன?

Mahendran
சனி, 30 மார்ச் 2024 (18:59 IST)
மதுரை சித்திரை திருவிழா, உலகிலேயே மிக அதிக நாட்கள் நடைபெறும் ஒரு ஆன்மீக திருவிழா என்ற பெருமை கொண்டது. இதன் சிறப்புகள் பல:
 
* 400 ஆண்டுகளாக காலம் தொன்று தொட்டு, சித்திரைத் திருவிழா வரலாற்று பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
 
* சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா.
 
* சமய ஒற்றுமையை வளர்ப்பதற்காக மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டன.
 
* ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் (ஏப்ரல்-மே) 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
 
* 2024ல், ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8ம் தேதி வரை நடைபெறும்.
 
கொடியேற்றம், பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் உலா, ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் உலா வரும் காட்சியை காண பல்லாயிரகணக்கான மக்கள் கூடுவார்கள்.
 
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் செய்து, வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் நிகழ்வு, *மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பான விசேஷ நாட்கள் ஆகும்,.
 
கற்பக விருக்ஷம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், கைலாச பர்வதம், காமதேனு வாகனம், தங்க பல்லக்கு, வேடர் பறி லீலை, தங்க குதிரை வாகனம், ரிஷப வாகனம், நந்திகேஸ்வரர், யாளி வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருள்வார்கள்.
 
 விழாவின் 10ம் நாள், சுந்தரேஸ்வரரின் அண்ணனான கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.  விழாவின் 14ம் நாள், மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் தேரில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வரும் நிகழ்வு. இந்த விழாவை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்