ஸ்ரீ தேவி நாககன்னி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்.!!

Senthil Velan
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (13:33 IST)
கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலை ஆபத்தானபுரம் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி நாகக்கன்னி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
 
முன்னதாக கோயில் வளாகத்தில் நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாகமண்டப ஹோமம் உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து கலசங்கள் அனைத்தும் கோயில் வளாகத்தை சுற்றி கொண்டுவரப்பட்டது.
 
இதை அடுத்து நாககன்னி அம்மன் சிலைக்கு புனித நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு கோவிலில் உள்ள கோபுர கலசத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
 
பின்னர் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள கருப்புசாமி, மாரியம்மன் ஆகிய சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் கற்ப கிரகத்தில் உள்ள நாக கன்னியம்மனுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

ALSO READ: நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.! சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு.!!
 
இந்நிகழ்வில் வடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்