64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்?

Prasanth Karthick
புதன், 6 நவம்பர் 2024 (09:54 IST)

மிகவும் அரிதாக நிகழும் குபேர யோகம் வரும் கார்த்திகை மாதத்தில் இரண்டு ராசிக்காரர்களுக்கு வளத்தை அருள உள்ளது.

 

 

தேவாதி தேவர்களும் செல்வத்தை கடனாக பெரும் அளவு செல்வ செழிப்புடன் இருப்பவர் குபேர பகவான். வீடுகளில் குபேர பொம்மை வைத்து செல்வம், வளம் பெருக வேண்டுவது வழக்கம். அப்படியான குபேரனின் யோகம் அரிதாக சில ராசிகளின் மீது சஞ்சரிக்கும்போது அவர்கள் வசதி, வாய்ப்பை பெறுவதற்கான அனுகூலங்கள் ஏற்படுகிறது.

 

அவ்வாறாக இந்த மாதத்தில் வரும் கார்த்திகை 16ம் நாளில் அமாவாசைக்கு பிந்தைய திதியில் குபேர பார்வை 12 ராசிக்காரர்களில் மேஷ ராசியினருக்கும், மீன ராசியினருக்கும் அருள் பாலிக்கிறது. இந்த நாளில் குபேரனை வேண்டி வணங்குவதால் இந்த ராசிக்காரர்களுக்கு குபேர கடாட்ஷம் கிடைக்கும். இந்த நாளில் மஞ்சள், குங்குமம், வெள்ளி, தங்கம், தானியங்கள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களில் ஏதாவது சிலவற்றை வாங்கி வீட்டின் பூஜையறையில் வைக்கலாம்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்