108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றான மதுரை கூடல் அழகர் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது என்பதும் பக்தர்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து வழிபடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை என்றாலே உடனே ஞாபகத்திற்கு வருவது மீனாட்சியம்மன் கோயில். இதற்கு அடுத்தபடியாக கூடல் அழகர் பெருமாள் கோயில் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
108 திவ்யப்பிரதேசங்களில் 47வது கோவிலாக விளங்கும் இது பெரியாழ்வார் பாடிய திருத்தலம் என்ற பெருமை உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் விமானத்தை வலம் வரும் வழக்கம் உள்ளது.
பஞ்சபூதங்களை பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் இந்த கோயிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது