முன்வினை பாவம் தீர இந்த நேரத்தில் விளக்கேற்றுங்கள்!

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (22:03 IST)
முன்வினை பாவம் தீர வேண்டுமென்றால் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
பொதுவாக கார்த்திகை மாதத்தில் காலை மாலை இரண்டு வேளைகள் விளக்கேற்றினால் நன்மை கிடைக்கும் என்று கூறப்படுவதுண்டு. குறிப்பாக கார்த்திகை மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்னர் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றினால் முன்வினை பாவங்கள் விலகும் என்றும் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர தினத்தில் விளக்கேற்றினால் நிறைவான பலன்களை பெறலாம் என்றும் நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
எனவே இந்த கார்த்திகை மாதத்தை மிஸ் செய்து விடாமல் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்