கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி?

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (18:03 IST)
கந்த சஷ்டி விரதத்தை ஏராளமான முருக பக்தர்கள் கடைபிடித்து வரும் நிலையில் இதை எப்படி சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை பார்ப்போம் 
 
கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுசரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும் அதிகாலை 5 மணிக்கு முன்பே எழுந்து குளிர்ந்த நேரில் நீராடி பின்னர் முருகன் படத்திற்கு மாலையிட்டு கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும். 
 
ஆறு நாளும் உபவாசம் இருக்க வேண்டும் என்பதும்  காலையில் மட்டும் பட்டினியாக இருந்து மதியம் மட்டும் சிறிது சாப்பிட வேண்டும் இரவில் பால் அல்லது பழங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். 
 
ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா போன்ற மந்திரங்களை மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விரதத்தை தவறாமல் இருந்தால் முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்