திருச்செந்தூர் கந்தசஷ்டி: 3-ஆம் நாள் உற்சவம்; தங்கத் தேரில் சுவாமி பவனி

Mahendran

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (18:37 IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாள் நேற்று முன் தினம் இரவு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் கிரி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
இன்றைய 3ஆம் நாளில் கோவில் நடை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டதை தொடர்ந்து, விஸ்வரூபம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமானது. நண்பகல் 12 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்கச் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை நிகழ்வுகளை தொடர்ந்து, சுவாமி மீண்டும் தங்கத் தேரில் கிரி வீதி வலம் வர உள்ளார்.
 
அக்டோபர் 27 மாலை 4.30 மணிக்குக் கடற்கரையில் புகழ்பெற்ற சூரசம்ஹாரம் வைபவம் நடைபெறுகிறது. அக்டோபர் 28 இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற இருக்கிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்