திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! சூரசம்ஹாரம் எப்போது? விரிவான தகவல்கள்!

Prasanth K

புதன், 22 அக்டோபர் 2025 (08:41 IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.

 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். சூரபத்மனை வதம் செய்த முருக பெருமான் வந்து அமர்ந்த ஸ்தலமாக இது உள்ளது. இங்கே ஆண்டுதோறும் ஐப்பசியில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வாய்ந்தது. 

 

இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விரதம் இன்று (அக்டோபர் 22) தொடங்குகிறது. இதற்காக அதிகாலை 1 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு யாகசாலை எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாடுத்றை ஆதீன மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

 

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6ம் நாள் (அக்டோபர் 27) திங்கட்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் 18 இடங்களில் தங்குவதற்காக தற்காலிக கொட்டைகளை அமைத்துள்ளனர். திருவிழா காலங்களில் 700 போலீஸாரும், சூரசம்ஹார நாளில் 4,600 போலீஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்