விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா? ஆன்மீகவாதிகள் பதில்..!

Mahendran

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (18:22 IST)
விரதம் இருக்கும்போது கோவில் பிரசாதம் சாப்பிடலாமா என்ற குழப்பம் பலருக்கு உண்டு. ஆனால், விரதம் இருந்தாலும் கோவில் பிரசாதத்தை சாப்பிடலாம்.
 
பிரசாதம் என்பது கடவுளின் அருள்: கோவில் பிரசாதம் என்பது வெறும் உணவு அல்ல, அது கடவுளின் அருள். அதைச் சாப்பிடுவதால் விரதம் முறிந்துவிடாது.
 
சிறிய அளவில்: பிரசாதம் பொதுவாக மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்படும். அது உங்கள் விரதத்திற்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாது.
 
தனிப்பட்ட விரதம்: விரதம் என்பது இறைவனை நினைப்பதே அதன் முக்கிய நோக்கம். பிரசாதம் கிடைக்கும் என்பதற்காகவே கோவிலுக்கு செல்வது சரியான அணுகுமுறை அல்ல.
 
விரதம் இருக்க உகந்த நாட்கள்:
 
ஞாயிறு: சூரிய பகவான்
 
திங்கள்: சிவபெருமான்
 
செவ்வாய்: முருகப்பெருமான்
 
புதன்: பெருமாள்
 
வியாழன்: நவக்கிரகங்கள்
 
வெள்ளி: அம்மன்
 
சனி: சனி பகவான், பெருமாள்
 
விரதம் என்பது அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்தது. அது உடலை வருத்துவது அல்ல, மனதை இறை சிந்தனையில் நிலைநிறுத்துவது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்