ஏகாதசி விரதம்: மகாவிஷ்ணுவின் அருளை அள்ளித்தரும் புனித நாள்!

Mahendran

திங்கள், 21 ஜூலை 2025 (18:17 IST)
ஏகாதசி திதி என்பது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த ஒரு புனித நாளாகும். நாம் மேற்கொள்ளும் விரதங்களில், ஏகாதசி விரதம் மிகுந்த புண்ணியத்தை தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. 
 
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் என இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. இப்படி ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பெயரும் சிறப்பான பலன்களும் உண்டு.
 
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தம், நெல்லிக்காய் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். நெல்லிமரம் இருந்தால் அதையும் வழிபடலாம்.
 
விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் அரிசி உணவை தவிர்க்க வேண்டும். பழங்கள், நீர் ஆகாரங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உப்பை தவிர்ப்பது நல்லது. மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 
ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்க கூடாது. மறுநாள் துவாதசி திதியில், ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகே விரதத்தைநிறைவு செய்ய வேண்டும்.
 
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதன் மூலம், மகாவிஷ்ணுவின் அருளையும், வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெறலாம் என்பது இந்து மத நம்பிக்கையாகும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்