மலேசியாவில் புதிய அனுமன் கோயில் கட்டப்பட்ட உள்ள நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இந்த கோவிலை கோலாலம்பரியில் உள்ள பிரிக்பீல்ட் என்ற பகுதியில் கட்டியுள்ளனர். பிரம்மாண்டமாகவும் அழகிய வேலைபாடுகளுடன் உள்ள இந்த கோவில் இரண்டு தளங்களைக் கொண்டது. முதல் தளத்தில் அனுமன் சன்னதி மற்றும் இரண்டாவது தளத்தில் நூலகம், தியான அறை அமைந்துள்ளது.
தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கோயில் பக்தர்களுக்காக திறந்து இருக்கும் என்றும் இந்த கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இந்த கோவிலில் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோவில் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.