இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும் சூழலில், நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் என நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு கருத்து தெரிவித்தனர்.