கடவுளுக்கு போட்ட மாலைகளை பக்தர்களுக்கு போடுவது சரியா?

Mahendran
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (18:39 IST)
கடவுள் சிலைகளுக்கு போட்ட மாலையை எடுத்து பூசாரிகள் பக்தர்களுக்கு போடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இது சரியா என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். 
 
இதற்கு ஆன்மீகவாதிகள் பதில் அளித்தபோது பக்தர்கள் அனைவரும் கொடுக்கும் மாலைகளை கடவுள் சிலைக்கு போடும்போது அந்த மாலை புனித தன்மை பெறுகிறது என்றும் தெய்வ சக்தியும் அந்த மாலைகளுக்கு கிடைக்கிறது என்றும் அந்த மாலையை பக்தர்களுக்கு அணிவதால் பக்தர்கள் திருப்தி அடைவார்கள் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் பக்தர்களுக்கு கொடுக்கும் அனைத்து மாலைகளையும் கடவுள் சிலையில் இருந்தால் எண்ணிக்கை அதிகம் ஆகிவிடும் என்றும் அவ்வப்போது அந்த மாலைகளை எடுத்து பக்தர்களுக்கு கொடுப்பதால் பக்தரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறியுள்ளனர். 
 
எனவே கடவுளுக்கு சாத்திய மாலையை பக்தர்களுக்கு அறிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை மாறாக பக்தர்களுக்கு அது தெய்வ அருள் கிடைத்த நம்பிக்கை கிடைக்கும் என்றும் கூறி வருகின்றனர் .
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்