வைகாசி மாத அமாவாசை: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

Webdunia
புதன், 17 மே 2023 (18:48 IST)
ஒவ்வொரு அமாவாசைக்கு  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள் என்பது தெரிந்தது
 
அந்த வகையில்  வைகாசி மாசம் அமாவாசை தினத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மே 20 ஆம் தேதி முதல் 4 நாட்கள் வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. 
 
வைகாசி அமாவாசைக்கு சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது 
 
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மழை  பெய்தால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை என தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்