தமிழ் புத்தாண்டு நாளில் செய்யப்படும் உணவுகள் என்ன தெரியுமா...?

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (16:37 IST)
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும்.


இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம்.

மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் அம்சமாக இச்செயல்பாடு கருதப்படுகிறது. மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்கு சென்று, பலகாரங்களை பகிர்ந்துண்பது நிகழும்.

வாழ்க்கை என்றாலே கசப்பும், இனிப்பும் கலந்ததுதான். இப்புத்தாண்டிலும் கசப்பும், இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்