ஸ்ரீ மகா லட்சுமி வாசம் செய்யும் இருப்பிடங்கள் எவை என்று தெரியுமா?

Webdunia
லட்சுமி தேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், நன்றி மறவாதோர், புலன்களை அடக்கியோர், சத்வ குணமுள்ளோரிடமும் நான் வசிக்கிறேன்.

 
பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, பசுக்களைப் போஷித்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளிலும் நான் வசிக்கிறேன். 
 
பெரியோர் களுக்குப் பணிவிடை செய்தும் அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள  பெண்களிடம் நான் வசிக்கிறேன். 
 
பண்டங்களை வீணடிப்போர், கோபமுள்ளோர், தேவதைகள், பெரியோர்கள், வேத பிராமணர் களை பூஜிக்காத, மரியாதை  செய்யாத பெண்களிடமும், கணவனுக்கு எதிராகவோ, விரோத மாகவோ இருக்கும் பெண்களிடமும் நான் வசிப்பதில்லை. 

எப்போதும் படுத்திருப்பவளும், சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும், நான் வசிப்பதில்லை. வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும்போது தொம், தொம்மென்று பூமி அதிர நடக்கும் பெண்களின் இல்லங்களிலும் நான் வசிப்பதில்லை. 
 
வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும்,  அன்னங்களும், அன்றில் கூவுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பியும், சிம்மங்கள், யானைகளால் கலக்கப்பட்ட நதிகளிலும் நான் வசிக்கிறேன். 
 
யானை, ரிஷபம், அரசன், சிம்மாசனம், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன். எந்த வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யப் பட்டு தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படுகிறதோ அவ்வீடுகளிலும், நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளோரிடமும் வசிக்கிறேன்.
அடுத்த கட்டுரையில்