ஆடி அமாவாசையை முன்னிட்டு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆறு, தீர்த்தமலை, மற்றும் தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பாவங்கள் நீங்க வேண்டி ஏராளமானோர் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
ஒகேனக்கல் காவிரிக்கரையில் அதிகாலையிலிருந்தே மக்கள் குவிய தொடங்கினர். வாழை இலை, அரிசி, தேங்காய் போன்ற பொருட்களுடன் பூஜை செய்து, முன்னோர்களை வழிபட்ட பின் அவற்றை ஆற்றில் விட்டனர். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.