சந்திரகிரகணம் 2023: நிகழும் நேரம், எங்கே பார்க்கலாம்? செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (15:38 IST)
சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சமயத்தில் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும்.

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 29-ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 1 மணி 05 நிமிடத்திற்கு தொடங்கி 2 மணி 24 நிமிடம் வரை சந்திரகிரகணம் நிகழவுள்ளது.

சந்திர கிரகணம் நிகழும் நேரம் இந்தியாவில் நள்ளிரவு என்பதால் இந்தியாவில் சந்திர கிரகணம் தெளிவாக தெரியும்.

சந்திர கிரகணம் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே கோயில் நடைகள் அடைக்கப்படும். கிரகணம் முடிந்தவுடன் கோயில்களை சுத்தம் செய்து, பரிகார பூஜைகள் செய்யப்படும். அதன் பிறகுதான் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

ஐப்பசி பௌர்ணமி, அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழவுள்ளதால் ரேவதி, அஸ்வினி, பரணி, ரோகிணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்தவுடன் காலையில் குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது.

கிரகண நேரத்தில் சாப்பிடுவது, தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் உணவுப் பொருட்களில் தர்பை புல்லை போட்டு வைக்கலாம். கிரகணம் முடிந்தவுடன் வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்