முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமையின் சிறப்புகள் என்ன?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (10:09 IST)
செவ்வாய் கிழமைக்கு உகந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது  முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. 

 
முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.
 
கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம்.
 
வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து, ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகற வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.
 
இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும். முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும்.
 
அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்