ஏகாதசி தினத்தில் மேற்கொள்ளும் விரதங்களும் பலன்களும் !!
திங்கள், 28 மார்ச் 2022 (11:08 IST)
மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருப்பதுதான் ஏகாதசி.
அமாவாசை, பௌர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.
பங்குனி தேய்பிறை ஏகாதசி விஜயா எனப்படும். இந்த நாளில் ஏழு வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம்.
வளர்பிறை ஏகாதசி ஆமலகி எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும். ஒரு ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி கமலா ஏகாதசி எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பாகும்.