வாஸ்துப்படி தெற்குதிசை பார்த்த வாசல் நல்லதா...?

Webdunia
ஒரு மனையின் நான்கு திசைக்கும் அதன் நான்கு மூலைகளுக்கும் ஒவ்வோரு அதிபதிகள் ஆட்சி புரிகிறார்கள். வடகிழக்குக்கு ஈசான்யம், தென்கிழக்குக்கு அக்னிதேவன், வடமேற்குக்கு வாயுதேவன், தென்மேற்கில் நிருதிதேவன் ஆவார்.
வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள்.
 
வடக்கு, கிழக்கு மனைகளில் வசித்தாலும் காரணமில்லாமல் பல பிரச்னைகளோடு வாழ்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் முறையான வாஸ்து சாஸ்திரப்படி அந்த மனைகள் அமையாததுதான். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை.
 
வாஸ்துப்படி அமைந்த தெற்குப் பார்த்த மனைகளில் வசிப்பவர்களுக்குப் பணம் மிதம் மிஞ்சி கொட்டுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. காரணம் தெற்கு  மனையை 'ஐஸ்வர்ய மனை' என்று சொல்வார்கள். வாஸ்துப்படி ஐஸ்வர்யம் என்பது, வற்றாத செல்வ வளத்தையும், மக்கட் பேற்றையும் குறிக்கும்.
 
பல பெரிய தொழிலதிபர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவை தெற்கு திசை நோக்கிய படி தான் இருக்கிறது என்பது பலரும் அறியாத உண்மையாகும். 
 
தெற்குப் பார்த்த மனையானது பெரும்பாலும் ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மராசி அன்பர்களுக்கு யோகமுள்ள மனையாகின்றது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்