அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்! ராசிபலன்கள், பரிகாரங்கள்! – ரிஷபம்

Prasanth K

புதன், 16 ஜூலை 2025 (15:56 IST)
அதிர்ஷ்டம் தரும் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
 
கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) -  சுக  ஸ்தானத்தில் செவ்வாய், கேது -  தொழில்  ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ -  லாப  ஸ்தானத்தில் சந்திரன்  - அயன சயன போக  ஸ்தானத்தில்  சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

17-07-2025 அன்று புதன் பகவான்  ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-07-2025 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-07-2025 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

03-08-2025 அன்று புதன்  பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 
பலன்:

சொன்ன சொல்லை தவறாமல் நடக்கும் குணம் கொண்ட ரிஷப ராசியினரே நீங்கள் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.

பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞ்சர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:  மல்லிகை அர்ப்பணித்து லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்:  ஆக 06, 07

அதிர்ஷ்ட தினங்கள்:  ஜூலை 29, 30, 31

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்