தயிர் உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் உருவாகும் அபாயத்தை குறைக்குமா...?

புதன், 27 ஏப்ரல் 2022 (18:00 IST)
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள குற்றங்கள் அனைத்தையும் சரிசெய்யும்.


தயிரில் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தயிர் பாலை விட எளிதில் ஜீரணிக்க கூடியது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள், பாலை உட்கொள்ள முடியாதவர்கள்  தயிரை உட்கொள்ளலாம்.

அதிக உணவினை உட்கொள்ளும்போது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். தயிரில் சீரண சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதனால் ஏற்படும் வாயு பிரச்சனைகளும் தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனைகள் தீர தயிர் அடிக்கடி உபயோகிக்க குணமாகும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தயிர் தண்ணீரில் கலந்து குடிக்க வயிற்று போக்கு நிற்கும்.

தயிரை தினமும் உட்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமையாக்கும். இரவில் சரியாக தூக்கம் இல்லாதவர்கள் சிறிது தயிர் எடுத்து தலையில் தேய்த்து தூங்க நன்றாக தூக்கம் வரும்.

வயிற்றில் வெப்பம் அல்லது எரிச்சல் இருந்தால்  தயிரில் இருந்து தயாரிக்கப்படும் லஸ்ஸி குடிப்பது நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு அல்லது உடல் சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி நீங்க ஒரு கப் தயிரில் சிறிதளவு வெந்தயம் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தயிர் சாதம் சாப்பிடலாம்.

பாலை தயிராக மாற்றும் ஒரு வித பாக்டீரியாக்க குடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழித்து பாதுகாக்கின்றது. சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாக தயிர் பயன்படுகிறது.

தயிர் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும். வழக்கமாக தயிர் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்