குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி உடைகள் சிறந்தவை. காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக்கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்க வைப்பதால், விட்டமின் டி சத்து கிடைக்கும்.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர, வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. பலர் குழந்தை பிறந்ததுமே சர்க்கரை தண்ணீர் கொடுப்பார்கள். இது தவறான பழக்கம். இதனால், கலோரி அதிகமாவதோடு, குழந்தைக்கு இன்பெக்ஷனும் வரக்கூடும்.