உடல் எடையை குறைக்க உதவும் எளிய டிப்ஸ்..!

அருகம்புல் சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பச்சை பாலில் கலந்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து  விடும்.

ஆமணக்கின் வேர் இடித்த தேன் கலந்து நீரில் இரவில் ஊற விட்டு காலை அதனை பிழிந்து நீரை வடிக்கட்டி குடித்தால் உடல் பருமன் குறையும். கரிசலாங்கண்ணி இலையை பாசி பருப்புடன் சேர்த்து தினமும் சமையல் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
 
சோம்பு உடல் எடை குறைய ஒரு சிறந்த மருந்து எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சோம்பை சிறிதளவு எடுத்து கொண்டு ஒரு கப் தண்ணீரில் நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
 
பப்பாளிக்காயை கூட்டு செய்து தினமும் சாப்பிடலாம் இதனால் மிக விரைவில் தொப்பை கரையும். உணவில் அதிகம் தேங்காய் சேர்க்காமல் வெங்காயம்  சேர்க்கலாம்.
 
முள்ளங்கி கீரையை உணவில் அதிகம் சேர்க்கவும், இதனால் உடல் எடை மிக விரைவில் குறையும், அதேபோல் தொப்பை குறைய ஆரம்பிக்கும். பிரண்டை  தண்டுகள் தோல் நிக்கி சிறு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து அதை நன்றாக காய்வைத்து, பொடி செய்து கொள்ளவேண்டும்.
 
இந்த பொடியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு, ஐந்து துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து மறுப்படியும் உலர்த்தி எடுக்கவும். இவற்றை தினமும் சாப்பிடுவதர்க்கு முன் 1/2 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து விட்டு உணவு அறுந்த வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்