கோடைகாலத்தில் தவறாமல் இரண்டு முறை நீராடவும் வெந்நீரை தவிர்க்கவும். வாரம் இருமுறை நீரில் வேப்பிலையை போட்டு, ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து நீராடினால் உடம்பில் உள்ள அழுக்குகள் வெளியேறி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
மஞ்சள் தேய்த்து குளித்தால் முகம் பளபளக்கும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்பட்டு தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.
சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.
அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
கோடையில் குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.
வாரமிருமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.