தலைமுடி உதிர்வதை தடுக்கும் சில மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிறை ஒரு அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளிப்பதால் கேசத்துக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது  குறையும். 

இளநீர் மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை கழுவுவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து விடுபடலாம்.
 
இளஞ்சூடான எண்ணையை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைகின்றன.
 
முடி உதிர்ந்த இடத்தில எலுமிச்சை விதை மற்றும் மிளகு சேர்த்து அரைத்து தடவி வர முடி கொட்டுவது நிற்பதோடு புதியதாக முடி வளர்வதற்கும் உதவுகிறது.
 
பூசணி கொடியின் கொழுந்து இலையை பறித்து சாறினை பிழிந்து தலையில் ஏற்பட்டுள்ள சொட்டையில் தடவி வர முடி வளரத் தொடங்கும்.
 
எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும் மூலிகை வேப்பிலை. வேப்பிலையை வேக வைத்து அந்த நீரை தலைக்கு குளிக்கும் பொது பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது குறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்