இயற்கை முறையிலான சில அற்புத அழகு குறிப்புகள் !!

Webdunia
கண்களுக்கு கீழே கருவளையத்தை போக்க சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்கும்முன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்கவேண்டும். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் கருவளையம் மறையும்.

பெண்கள் தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலைக் குளியல் அழகுக்கு அழகு சேர்க்கும். பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகமும் அதிக அழகு பெறும். வாரத்தில் இரு முறையாவது உடல் முழுக்க பாலை தடவி அல்லது குளிக்கும் நீரில் பாலை கலந்து குளித்து வரலாம்.
 
தலையில் தேங்காய் எண்ணெய்யை நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். காலின் உள்பாகத்தில் தேங்காய் எண்ணெய்  தேய்த்தால் கண்ணுக்கு பொலிவு கிடைக்கும்.
 
சில பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி முளைத்திருக்கும். சிலருக்கு முடி கன்னத்தின் பக்கவாட்டிலும் முளைக்கும். குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து,  விரலி மஞ்சள் மூன்றையும் மைப்போல் நன்றாக அரைத்து இரவில் படுக்குமுன் முடி இருக்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து விடும்.
 
முகம் அழகாக இருக்கும், ஆனால் கழுத்துக்கு முன்னும் பின்னும் கருமையாக இருக்கும். இதை நீக்க, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி, குளிக்கும்போது கழுத்தில் சோப் தடவி, கூட்டை வைத்து நன்றாக தேய்த்து கழுவுங்கள். நாளடைவில் கழுத்து கருமை நிறம் மாறிவிடும்.
 
சில பெண்களுக்கு இளநரை தோன்ற ஆரம்பிக்கும். இவர்கள் வீரியமான ஷாம்புகளை உபயோகிப்பதை தவிர்த்து, சீயக்காயை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கொட்டை எடுத்த நெல்லிக்காய்களுடன், எலுமிச்சம்பழச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, மாதம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் இளநரை மறைந்துவிடும். முடி உதிர்வதும் கட்டுப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்