உதடு சிவப்பாக சில அற்புத அழகு குறிப்புக்கள் !!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:57 IST)
சில நேரங்களில் உதடுகள் கருமை அடைவதோடு, வறண்டு போகவும் நேரிடும். இதைத் தவிர்ப்பதற்கு போது மான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உதடுகள் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
  
உதடுகள் சிவப்பாக வைட்டமின் சி:உதடு கருப்பாக காரணம் பல இருந்தாலும் அதில் புகை பிடிப்பது மற்றும் அடிக்கடி தேநீர் அருந்தவதும் அடங்கும். இதனைத் தவிர்க்க தினமும் காலையில் தேநீருக்கு பதிலாக, வைட்டமின் ‘சி’ நிறைந்த ஆரஞ்சு அல்லது எலுமிச்சம் பழச்சாறை அருந்தலாம். இது ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன் உதடுகளை மெருகேற்றும்.
 
உதடு சிவப்பாக தேன்: தேன் ஒரு அற்புதமான இயற்கை மூலப்பொருள், இது கருமையான உதடுகளை சிகப்பாக மாற்றுவதற்கு பல பயன்படுகிறது. இது உதடுகளை பள பளக்க வைப்பது மட்டுமல்லாமல் மென்மையாகவும் ஆக்குகிறது.
 
இரவு தூங்க போகுமுன் தினமும் தேனை உதட்டில் தடவ வேண்டும். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வர உதடு சிவப்பாகும்.

உதடுகளைத் தூய்மைப் படுத்த, தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு. 1/2 தேக்கரண்டி சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு. 4 துளிகள் தேன் மற்றும் 2 துளிகள் எலுமிச்சை சாறு போன்ற வற்றை நன்றாக கலந்து, சர்க்கரை கரைவதற்கு முன்பு உதட்டின் மீது பூசி, 2 முதல் 3 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, உதடுகள் மிருதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்