சரும பிரச்சனைகளை போக்கி பளபளக்க செய்யும் வாசனை குளியல் பொடி தயாரிப்பது எப்படி...?

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. இவை  சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன. கிருமிகள் அழுக்குகள் தங்காமல் காக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்:
 
சோம்பு - 100 கிராம், வெட்டி வேர் - 200 கிராம், சந்தனத் தூள் - 300 கிராம், கார்போக அரிசி - 200 கிராம், பூலான்கிழங்கு - 200 கிராம், பாசிப்பயறு - 500 கிராம்,  கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்.
 
செய்முறை:
 
இவைகளை தனித்தனியாக வெயிலில் காயவையுங்கள். பின் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஈரம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பூஞ்சை பிடித்துவிடும்.
 
தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் கலந்து தேய்த்து குளியுங்கள். அவ்வாறு குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இப்படி  தொடர்ந்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும்.  மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும்.
 
சருமம் அழகு பெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பூசி குளிக்க வைத்தால் உடல் முழுவதும் ரோமங்கள் வருவதை தவிர்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்