இயற்கையான முறையில் முகம் பட்டு போல மின்னவேண்டுமா...?

இயற்கையான முறையில் நாம் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க இங்கு பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது. அவற்றை பின்பற்றினாலே என்றும் முகம் பளிச்சென்று இருக்கும்.

முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் அழகு குறிப்புகள்
ஸ்ட்ராபெர்ரி பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
 
பீக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.
 
எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.
 
பூண்டில் உள்ள உட்பொருள்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
 
ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
 
ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்தால், முகம் பளிச்சென்று இருக்க, இந்த ப்ளீச் நல்ல பலன்தரும்.
 
தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்