அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 3 டீஸ்பூன், காய்ச்சாத பால் அல்லது பன்னீர் - 3 டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன். செய்முறை: அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.