பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.
வாரத்தில் இரு முறையாவது உடல் முழுக்க பாலை தடவி அல்லது குளிக்கும் நீரில் பாலை கலந்து குளித்து வரலாம். இதன் மூலம் முகத்தில் தோன்றும் எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படும் தடிப்புகள், வறண்ட சருமம், சரும அரிப்புகள் போன்ற பிரச்சனையை சீர் செய்கிறது. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கிறது.