முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை நீக்கி பொலிவாக்கும் அழகு குறிப்புக்கள் !!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (17:20 IST)
ஜாதிக்காய், கிராம்பு இரண்டையும் பொடித்து, பன்னீரில் குழைத்து ‘பேக்’ போட்டுக் கழுவினால், பருக்கள் குறையும்.


கொத்துமல்லி, புதினா, துளசி, சிறிது வேப்பிலைக் கொழுந்து இவற்றை அரைத்து, எலுமிச்சை சாறு கலந்து, அரை ஸ்பூன் முல்தானிமட்டி சேர்த்து முகத்தில் ‘பேக்’ போடவும். 20 நிமிடம் கழித்து, கழுவினால், முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து, பொலிவுடன் மின்னும்.

2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் தூள், ஒரு டீஸ்பூன் பாதாம் தூள் இந்த மூன்றையும் கொஞ்சம் பாலில் குழைத்து, ‘ஸ்கிரப்’ போல முகத்தில் போட்டுக் கழுவினால், கருவளையம் மறைந்து, முகம் பளிச்சென மாறும். ஆனால், பாதாம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவர்கள், பொடித்த ஓட்ஸ், பால் கலந்து உபயோகிக்கலாம்.

கேரட்டை அரைத்து, தேன், எலுமிச்சம்பழச் சாறு கலந்து, சிறிதளவு முல்தானிமட்டி சேர்த்துக் குழைத்து, ‘பேக்’ போடுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரால் கழுவி வர, டீன் ஏஜ் பெண்களுக்கு கோடையில் முகத்தில் வரும் சிவப்புத் திட்டுகள், புள்ளிகள் மறையும்.

தக்காளி ஓர் அருமையான இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட். 2 ஸ்பூன் தக்காளிச் சாறுடன், 2 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு கலந்து, முகத்தில் போட்டுச் சில நிமிடம் கழித்துக் கழுவினால், நல்ல நிறம் கிடைக்கும். பருக்கள் குறைந்து, முகம் பளிச்சிடும்.

புளித்த தயிரை, கைகள், முகம், கழுத்து, தோள்பட்டை என வெயில் படும் இடங்களில் தடவி, சில நிமிடங்கள் ஊறவிட்டு, கடலைமாவு போட்டுக் கழுவுங்கள். இதைத் தினமும் வெளியில் போய்விட்டு வந்ததும் செய்தால், அன்றன்று ஏற்படும் ‘டேனிங்’ மாறி, தோலின் இயற்கை நிறம் பாதுகாக்கப்படும்.

தேன் நல்ல ப்ளீச்சிங் ஏஜென்ட். பப்பாளிப் பழத் துண்டுகளை அரைத்து, தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவிக் கழுவினால், வறண்ட சருமம், ‘வழுவழு’ சருமமாக மாறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்