வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் பாக்கெட் உணவுகளை சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது. இந்த பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் ஜிரோ கொலஸ்ட்ரால், ஜிரோ சுகர் போன்ற வாக்கியங்களை பார்த்திருப்போம்.
உண்மையில் பாக்கெட்டுகளில் குறிப்பிடுவது போல இவை எல்லாம் உண்மைதானா? அல்லது மக்களை ஏமாற்றும் போக்கா என பலருக்குள் கேள்வி இருக்கும்.
கொலஸ்ட்ராலின் அளவு மில்லி கிராமில் கணக்கிடப்படும். பொதுவாக பாக்கெட் உணவில் 0 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் என்று குறிப்பிட்டிருந்தால் அதில் சுத்தமாக கொலஸ்ட்ராலே இல்லை என்று அர்த்தம் இல்லை.
நம் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிப்பது ஹைட்ரோஜனேடட் கொழுப்பு. இந்த ஹைட்ரோஜனேட்டட் கொழுப்பு என்பது கொலஸ்ட்ரால் மற்றும் சாட்டுரேட்டட் கொழுப்பினை விட மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது.
பெரும்பாலும், 0 கொலஸ்ட்ரால் என்று குறிப்பிட்டிருந்தாலும், அந்த பாக்கெட்டில் எங்கேனும் பார்ட்லி ஹைட்ரேட்டட் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இப்படி இருந்தால் அது 0 கொலஸ்ட்ரால் இல்லை அதில் கொலஸ்ட்ரால் உள்ளது என்றே அர்த்தம்.