இதய நோய்க்கு தூக்கம் ஒரு காரணமா?

சனி, 15 செப்டம்பர் 2018 (18:17 IST)
விஞ்ஞானம் வளர வளர புதிதாக  பலவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த வண்ணமாகவே உள்ளனர்.

அந்த வகையில்  ஜெர்மனியின் மியூனிச் நகரில் மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் பவுண்டஸ்,என்பவர் இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போது சுமார் 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகளின் முடிவில் ”மிகவும் குறைவாக நேரம் தூங்குவதால் இதயம் பாதிப்பதைப் போன்று , தொடர்ந்து அதிகமான நேரம்  தூங்கி வந்தாலும் இதயநோய்  வருவதற்கும் அதிக  வாய்ப்புகள் உண்டு” என்று கூறுகிறார்.

மேலும் இது குறித்து சரியான முடிவுகளைக் காண இன்னும் பல ஆரய்ச்சிகள் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்