சருமம் பொலிவாக வேண்டுமா? அப்ப தர்பூசணிதான் சரியான வழி....

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (16:09 IST)
கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதை மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது. தர்பூசணியால் சருமத்தை பொலிவாக்க சில குறிப்புகளை காண்போம்...
 
# தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், உடலை வறட்சியின்றி வைப்பதோடு,  சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும். உடலுக்கு இரும்பு சத்தும் நிறைந்ததாகும்.
 
# தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிற பழத்தின் சாற்றை தேனில் நனைத்து முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். 
 
# தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் மறையும். 
 
# தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். 
 
# முகத்தில் பருக்கள் இருந்தால், தர்பூசணி சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.
 
# தர்பூசணியின் சாற்றை காட்டனில் நனைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவது நனமை தரும். 
 
# தர்பூசணியை வைத்து ஃபேஸ் பேக் போட வேண்டும் என நினைத்தால் அதனுடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து பயன்படுத்துவது அதிக நன்மைகளை தரக்கூடும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்