ஆனால் உணவு குழாயின் தசைகள் காரம் நிறைந்த சூடான குளிர்ச்சியான உணவுகளை தாங்குமே தவிர அமிலத்தை தாங்கும் சக்தி கிடையாது. சாப்பிட்டவுடன் வலது பக்கமாக படுத்தால் இடுப்பையை சுற்றி இருக்கும் இடது பக்க குடல் இரைப்பையை அழுத்தும். அதன் காரணமாக உணவும் அமிலமும் சேர்ந்து உணவு குழாய்க்கு வந்து விடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
எனவே இரவு நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும், சாப்பிட்டவுடன் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும், இந்த இரண்டை கடைபிடித்தாலே நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.