பிறந்த குழந்தைகளை பச்சை தண்ணீரில் குளிக்க வைக்க கூடாது என்றும் வெந்நீரில் தான் குளிக்க வைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பச்சை குழந்தைகளுக்கு வாரம் மூன்று நாட்கள் தலைக்கு குளிக்க வைக்க வேண்டும் என்றும் அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள் குளிக்க வைத்தால் போதும் என்றும் பெரியவர்கள் கூறி உள்ளனர்.
மேலும் சோப்பு சிகைக்காய் போன்றவைகளை பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கு சோப் சொல்யூஷன் மட்டுமே போட்டு குளிப்பாட்ட வேண்டும். மேலும் ஆவி பறக்கும் வெண்ணீரில் குளிப்பாட்டாமல் வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குழந்தை சூடு தாங்கும் அளவுக்கு மட்டுமே உள்ள நீரை குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் குழந்தையை குளிர்ந்த நீரில் எந்த காரணத்தைக் கொண்டும் குளிப்பாட்ட வேண்டாம். பால் குடித்தவுடன் குழந்தையை குளிப்பாட்ட கூடாது என்றும் குளித்த பின் சிறிது நேரம் கழித்து தான் பால் உள்ளிட்ட உணவு பொருளை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது