வெந்தயத்தில் உள்ள சிறந்த மருத்துவ பயன்கள்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (00:19 IST)
வெந்தயம் விதைகளை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வருவது குறைவு. வெந்தயம் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவை இயல்பாக்குவதற்கு உதவுகின்றது.
 
வெந்தயம்  நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையிலிருந்து விடுபட வெந்தயம் சிறந்த  ஒன்றாகும். 
 
வெந்தயத்தை  இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கலாம். வெந்தயத்தை 15 நிமிடங்கள் நீரில் கொதிக்க வைத்து  குளிர்ந்த பின் வடிகட்டி குடிப்பதும் நன்மை பயக்கும். 
 
வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்மை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது. வெந்தயத்தை ஊற வைத்த நீரை தினமும் காலையில் குடித்து  வந்தால், அல்சர் பிரச்சனைக்கு தீர்வு உண்டாகும்.
 
மேலும் சர்க்கரை நோயானது நாள்பட குணமாகத் துவங்கும். வெந்தயத்தில் நார்சத்து இருப்பதால் அதிக பசி ஏற்படாமல் வயிற்றுக்கு தேவையானதை மட்டும் உட்கொள்ள உதவும்.  அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தையும் குறைக்கும்.
 
வெந்தயம் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று  வலிகளுக்கு ஊற வைத்த வெந்தய நீரானது மிக சிறந்தது. மேலும் சாதாரண வயிற்று வலிகளுக்கும் இது சிறந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்