வாக்கிங் செல்வது என்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படும் நிலையில், வெறுங்காலுடன் வாக்கிங் செல்ல விரும்புவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெறுங்காலுடன் நடப்பதால் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ளவர்கள் வெறுங்காலுடன் நடக்கும் வழக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளில் புல்வெளிகள் மற்றும் மணல் பரப்புகள் இருப்பதால், வெறுங்காலுடன் நடப்பது பாதுகாப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்ம ஊரின் சுற்றுச்சூழலில் வெறுங்காலுடன் நடப்பது சாத்தியமில்லை என்றாலும், சில இடங்களில் வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் இயற்கையுடன் இணைந்து இருப்பதை உணர முடியும் என்று கூறப்படுகிறது. வெறுங்காலுடன் நடப்பதால், பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்படும் என்றும், கால்கள் மற்றும் நரம்புகளுக்கு சரியான அழுத்தம் கொடுக்கப்படுவதால், நல்ல மனநிலையும் அமைதியும் ஏற்படுகிறது.
மேலும், வெறுங்காலுடன் நடப்பதன் மூலம் கணுக்கால் மற்றும் பாதங்களை துரிதமாக வேலை செய்ய தூண்டுகிறது. இது உடலின் சமநிலையை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இயற்கை சார்ந்த இந்த நடை முறையை அனுபவிக்க சில நேரங்களில் மனிதர்கள் முயற்சிக்கலாம்.
வீட்டின் மொட்டை மாடி அல்லது காம்பவுண்ட்களில் வாக்கிங் செய்யும் வழக்கமுள்ளவர்களுக்கு, வெறும் காலுடன் நடந்து இதன் பலனை அனுபவிக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். .